நிலையாமை

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.   (௩௱௩௰௮ - 338) 

தான் இருந்த கூடானது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு  (௩௱௩௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.  (௩௱௩௰௮)
— மு. வரதராசன்


உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.  (௩௱௩௰௮)
— சாலமன் பாப்பையா


உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்  (௩௱௩௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀼𑀝𑀫𑁆𑀧𑁃 𑀢𑀷𑀺𑀢𑁆𑀢𑀼𑀑𑁆𑀵𑀺𑀬𑀧𑁆 𑀧𑀼𑀴𑁆𑀧𑀶𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑁂
𑀉𑀝𑀫𑁆𑀧𑁄𑁆𑀝𑀼 𑀉𑀬𑀺𑀭𑀺𑀝𑁃 𑀦𑀝𑁆𑀧𑀼 (𑁔𑁤𑁝𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kutampai Thaniththu Ozhiyap Pulparan
ThatreUtampotu Uyiritai Natpu
— (Transliteration)


kuṭampai taṉittu'oḻiyap puḷpaṟan taṟṟē
uṭampoṭu uyiriṭai naṭpu.
— (Transliteration)


The soul's link to the body Is like the bird that flies away from the nest.

ஹிந்தி (हिन्दी)
अंडा फूट हुआ अलग, तो पंछी उड़ जाय ।
वैसा देही-देह का, नाता जाना जाय ॥ (३३८)


தெலுங்கு (తెలుగు)
గ్రుడ్డు పగిలినంత గువ్వ రివ్వున బోవు
ప్రాణ మట్లె దోహ భావమందు. (౩౩౮)


மலையாளம் (മലയാളം)
ഉയിരിന്നുടലോടുള്ള കൂറുനോക്കുക; മുട്ടയിൽ വിരിയും കുഞ്ഞുപ്രായത്തിൽ തോടുവിട്ടു പറന്നുപോം (൩൱൩൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಮೊಟ್ಟೆಯನ್ನು ಒಡೆದು ಬೇರೆಯಾಗಿ ಹಾರಿಹೋಗುವ ಹಕ್ಕಿಯಂತೆಯೇ ಶರೀರ ಮತ್ತು ಪ್ರಾಣಿಗಳ ನಡುವಿನ ಸಂಬಂಧ ಕೂಡ. (೩೩೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
द्विजे चाण्डं परित्यज्य व्योममार्गे गते सति।
द्विजस्याण्डेन सम्बन्धो य: स स्याज्जीवदेहयो:॥ (३३८)


சிங்களம் (සිංහල)
හැරදමාබිජුවට - කූරුල්ලකූ පියඹන මෙන් සිරුරෙ පණ රැඳුනත් - නැවත සිරුරෙන් පණ ඉවත් වේ (𑇣𑇳𑇬𑇨)

சீனம் (汉语)
生命離去身體, 猶如乳鳥之離殼. (三百三十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Anak burong meninggalkan kulit telor-nya yang telah pechah untok terbang pergi: demikian-lah ibarat chinta antara nyawa dan jasmani.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
새가 달걀 껍질에서 나오는 것처럼 영혼은 아무때나 신체를 떠난다. (三百三十八)

உருசிய (Русский)
Птица, выбираясь из скорлупы, оставляет ее навсегда. Точно так же обрывается связь тела и души

அரபு (العَرَبِيَّة)
الروح فى الجسد ليست إلا كمثل طائر ينبت ريشه ويريد أن يطير من البيضة المفسوخة (٣٣٨)


பிரெஞ்சு (Français)
L’oisillon parvenu à maturité abandonne l’œuf dont il est sorti et s’envole: telle est l’amitié de l’âme pour le corps.

ஜெர்மன் (Deutsch)
Die Liebe der Seele zum Körper gleicht dem Vogel, der wegfliegt und die Eierschale leer Zurückläßt.

சுவீடிய (Svenska)
Liksom fågelungen flyger bort och lämnar tomma ägget kvar, så lämnar själen kroppens hölje.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Ut avis evolat et ovum solum relinquit , ita se habet conjunctio animi cum corpore. (CCCXXXVIII)

போலிய (Polski)
Kiedy nagle realność dla niego zaginie I jak ptak poszybuje w zaświaty.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


உயிரும் உடலும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு எத்தகையது?

பறவையானது முட்டையில் கருவாக தோன்றி, பிறகு பறக்கும் பருவம் வரை வளர்ந்து, அதன் பின் முட்டையை உடைத்து தனியாக கிடத்திவிட்டு பறந்து போய்விடுகிறது.

அதுபோல, உயிரானது உடலோடு கூடிப் பிறந்து, பக்குவமான நிலை வரை வளர்ந்து, பிறகு அந்த உடலைவிட்டு பிரிந்து, பறந்து சென்று விடுகிறது.

பறவைக்கு முட்டை ஆதாரமாகிறது, அதுபோல, உயிருக்கு உடல் ஆதாரமாய் அமைகிறது.

பறக்கும் நிலை பெற்ற பறவை திரும்பவும் முட்டைக்கும் புகாது. அதுபோல, முதிர்வு (பரிபாகம்) அடைந்த உயிர் மீண்டும் உடல் பிரவேசத்துக்கு உடன்படாது.

இதுவே, உயிருக்கும் உடலுக்கும் உள்ள நட்பு.


குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22