வெகுளாமை

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.   (௩௱௫ - 305) 

ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச் சினமானது அவனையே முடிவில் கொன்று விடும்  (௩௱௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.  (௩௱௫)
— மு. வரதராசன்


தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.  (௩௱௫)
— சாலமன் பாப்பையா


ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும் இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்  (௩௱௫)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀢𑀷𑁆𑀷𑁃𑀢𑁆𑀢𑀸𑀷𑁆 𑀓𑀸𑀓𑁆𑀓𑀺𑀷𑁆 𑀘𑀺𑀷𑀗𑁆𑀓𑀸𑀓𑁆𑀓 𑀓𑀸𑀯𑀸𑀓𑁆𑀓𑀸𑀮𑁆
𑀢𑀷𑁆𑀷𑁃𑀬𑁂 𑀓𑁄𑁆𑀮𑁆𑀮𑀼𑀜𑁆 𑀘𑀺𑀷𑀫𑁆 (𑁔𑁤𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Thannaiththaan Kaakkin Sinangaakka Kaavaakkaal
Thannaiye Kollunj Chinam
— (Transliteration)


taṉṉaittāṉ kākkiṉ ciṉaṅkākka kāvākkāl
taṉṉaiyē kolluñ ciṉam.
— (Transliteration)


If you want to guard yourself, guard against anger; If unguarded, anger will kill you.

ஹிந்தி (हिन्दी)
रक्षा हित अपनी स्वयं, बचो क्रोध से साफ़ ।
यदि न बचो तो क्रोध ही, तुम्हें करेगा साफ़ ॥ (३०५)


தெலுங்கு (తెలుగు)
కోరనేల రక్ష కోపముడిగెనేని
కోరనెల్ల శిక్ష కోపమున్న. (౩౦౫)


மலையாளம் (മലയാളം)
ആത്മരക്ഷ നിനക്കുന്നോൻ ക്രുദ്ധനാവാതിരിക്കണം ക്രോധിക്കുന്നവനേ കോപം തന്നെത്താനേഹനിച്ചിടും (൩൱൫)

கன்னடம் (ಕನ್ನಡ)
ತನ್ನನ್ನು ತಾನು ಕಾದುಕೊಳ್ಳಬೇಕೆಂಬ ಅಪೇಕ್ಷೆ ಇದ್ದರೆ, ಒಬ್ಬನು ತನಗೆ ಕೋಪವು ಬರದಂತೆ ಕಾದುಕೊಳ್ಳಬೇಕು. ಹಾಗೆ ಅದನ್ನು ಕಾಯದೆ ಬಿಟ್ಟರೆ, ಅದು ತನ್ನನ್ನೇ ಕೊಲ್ಲುವುದು. (೩೦೫)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
य आत्मरक्षणे व्यग्र: स कोपं परिवर्जयेत्।
अन्यथा शत्रु भूतोऽसौ नाशयेत् कोपशालिनम्॥ (३०५)


சிங்களம் (සිංහල)
තමා රැකගනු වස්- කෝපය වැළැක්විය යුතූ නොවැළකූවොත් තමන්- මරයි කෝපය සැඟවෙමින් සිට (𑇣𑇳𑇥)

சீனம் (汉语)
人若自衞, 應抑制其憤怒; 不然, 憤怒將毁壞己身. (三百五)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Kalau-lah kamu hendak memelihara diri-mu, jauhi-lah diri dari ke- marahan: kalau-lah kamu ta’ berbuat bagitu, ia akan menerkam-mu dan memusnahkan diri-mu sendiri.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
분노에 대항해 자신을 지키지 않으면 자멸을 초래하리라. (三百五)

உருசிய (Русский)
Пусть обуздает себя человек, который жаждет спастись от собственного гнева. Если он не сделает этого, гнев бьет его

அரபு (العَرَبِيَّة)
إن ترد أن تصون نفسك من الهلاكة فتجنب عن الغضب فان لا تتجـنب عنه فان سيوقعك فى الهلاكة (٣٠٥)


பிரெஞ்சு (Français)
Si vous voulez vous préserver des maux, préservez-vous de la colère, sinon la colère vous tuera vous-mêmes.

ஜெர்மன் (Deutsch)
Will sich jemand selbst behurcn, hüte er sich vor dem Ärger - sonst zerstort er sein eigenes Seihst.

சுவீடிய (Svenska)
Den som vill bevara sig själv må vakta sin vrede. Om han ej gör det blir vreden hans eget fördärv.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
si tibi caveas, iram caveas; sin minus, ira te perimet. (CCCV)

போலிய (Polski)
Jeśli nie dość stanowczo położysz kres złości, Ona ściągnie na ciebie lawinę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22