கள்ளாமை

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.   (௨௱௯௰ - 290) 

களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது  (௨௱௯௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


களவு செய்வார்க்கு உடலில் உயிர் வாழும் வாழ்வும் தவறிப் போகும், களவு செய்யாமல் வாழ்வோர்க்கு தேவருலகும் வாய்க்கத் தவறாது.  (௨௱௯௰)
— மு. வரதராசன்


திருடுபவரை அவரது உயிரும் வெறுக்கும்; திருடாதவரையோ தேவர் உலகமும் வெறுக்காது.  (௨௱௯௰)
— சாலமன் பாப்பையா


களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது  (௨௱௯௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀴𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆 𑀢𑀴𑁆𑀴𑀼𑀫𑁆 𑀉𑀬𑀺𑀭𑁆𑀦𑀺𑀮𑁃 𑀓𑀴𑁆𑀯𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀢𑁆
𑀢𑀴𑁆𑀴𑀸𑀢𑀼 𑀧𑀼𑀢𑁆𑀢𑁂 𑀴𑀼𑀴𑀓𑀼 (𑁓𑁤𑁣)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth
Thallaadhu Puththe Lulaku
— (Transliteration)


kaḷvārkkut taḷḷum uyirnilai kaḷvārkkut
taḷḷātu puttē ḷuḷaku.
— (Transliteration)


Even life abandons him who defrauds others, But heaven never forsakes the honest.

ஹிந்தி (हिन्दी)
चिरों को निज देह भी, ढकेल कर दे छोड़ ।
पालक को अस्तेय व्रत, स्वर्ग न देगा छोड़ ॥ (२९०)


தெலுங்கு (తెలుగు)
దొంగవాని కిహమె దూరమై పోవంగ
నిగ్రహునికి దక్కు నింగి సుఖము. (౨౯౦)


மலையாளம் (മലയാളം)
മോഷ്ടാക്കൾക്കുലകിൽ നീണാൾ ജീവിതം സാദ്ധ്യമായിടാ; തദ്ദോഷരഹിതർ ദേവലോകത്തും നീണ്ടുവാഴുവോർ (൨൱൯൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕಳ್ಳತನ ಮಾಡುವವರಿಗೆ ಭೂಮಿಯಲ್ಲಿ ಉಸಿರೊಂದಿಗೆ ಬಾಳುವ ನೆಲೆಯೂ ತಪ್ಪಿಹೋಗುತ್ತದೆ. ಕಳ್ಳತನ ಮಾಡದವರನ್ನು ದೇವಲೋಕವೂ ಆದರಿಸುತ್ತದೆ. (೨೯೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
जीवनं स्पष्टमाकृत्या चोराणामिह दुर्लभम्।
चौर्यकर्मविहीनानां स्वर्गेऽपि सुलभायते॥ (२९०)


சிங்களம் (සිංහල)
ෆසොරකම් කරන විට - ඔවුන් පණනල වැනසෙයි නොකරන දනන් හට - වඩා ළංවේ දේව ලෝකය (𑇢𑇳𑇲)

சீனம் (汉语)
欺詐之徒卽其身亦不能保; 正義之士獲天之蔭, 享用無盡. (二百九十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Orang yang menipu orang lain tidak berkuasa malah terhadap diri- nya sendiri: tetapi keindahan alam dewa2 menjadi pesaka abadi mereka yang sentiasa jujor.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
도둑질을 멀리하는 자는 천국을 얻고, 도둑은 인생을 잃는다. (二百九十)

உருசிய (Русский)
Обманщику не принадлежит даже обитель души — тело. Иной мир небожителей примет лишь того человека, который чуждается обмана

அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يغش الآخرين لا سلطة لـه على نفسه وجسمه والذين هم صالحون لا يزالون فى ظل جميع الآلهة (٢٩٠)


பிரெஞ்சு (Français)
Le corps des habituels du vol périt; le monde des dieux ne manque pas à ceux qui ne volent pas.

ஜெர்மன் (Deutsch)
Betrüger verscherzen sogar ihr Leben - wer nicht betrügt, dem versagt sich nicht einmal die himmlische Welt.

சுவீடிய (Svenska)
Själva kroppen sviker dem som övar bedrägeri. De som ej vill stjäla blir icke svikna ens i gudarnas värld.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
A fraudulentis ipsorum corpus recedct; a fraude carentibus etiam mundus deorum non recedet. (CCXC)

போலிய (Polski)
Gdy ten, który pokonał ich siłę fatalną, Kiedyś stanie się równy pólbogom.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத் தள்ளாது புத்தே ளுளகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22