கள்ளாமை

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.   (௨௱௮௰௭ - 287) 

‘களவு’ எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லை யாகும்  (௨௱௮௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.  (௨௱௮௰௭)
— மு. வரதராசன்


உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.  (௨௱௮௰௭)
— சாலமன் பாப்பையா


அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது  (௨௱௮௰௭)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀓𑀴𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆 𑀓𑀸𑀭𑀶𑀺 𑀯𑀸𑀡𑁆𑀫𑁃 𑀅𑀴𑀯𑁂𑁆𑀷𑁆𑀷𑀼𑀫𑁆
𑀆𑀶𑁆𑀶𑀮𑁆 𑀧𑀼𑀭𑀺𑀦𑁆𑀢𑀸𑀭𑁆𑀓𑀡𑁆𑀝 𑀇𑀮𑁆 (𑁓𑁤𑁢𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Kalavennum Kaarari Vaanmai Alavennum
Aatral Purindhaarkanta Il
— (Transliteration)


kaḷaveṉṉum kāraṟi vāṇmai aḷaveṉṉum
āṟṟal purintārkaṇṭa il.
— (Transliteration)


Those gifted with the faculty of contentment Never have that shady skill called fraud.

ஹிந்தி (हिन्दी)
मर्यादा को पालते, जो रहते सज्ञान ।
उनमें होता है नहीं, चोरी का अज्ञान ॥ (२८७)


தெலுங்கு (తెలుగు)
చిక్కనముగ బ్రతుక చేతైన వానికి
నపహారింప దలఁచు నెపము లేదు. (౨౮౭)


மலையாளம் (മലയാളം)
ജിവരാശിമഹത്വങ്ങൾ യഥാതഥമറിഞ്ഞവർ മോഷണം പോലിരുൾ തിങ്ങുമാശയങ്ങൾക്ക് കീഴ്പ്പെടാ (൨൱൮൰൭)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಕಳ್ಳತನಕ್ಕೆ ಕಾರಣವಾದ ಕತ್ತಲೆಯ ಅರಿವು (ವ್ಯಾಮೋಹ), ವಿವೇಕದ ಬಲವನ್ನು ಬಯಸುವವರಲ್ಲಿ ಇರುವುದಿಲ್ಲ. (೨೮೭)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
आत्मानात्म विवेकादौ समर्थानां मनीषिणाम्।
चौर्य कारणमज्ञानं जायते न कदाचन॥ (२८७)


சிங்களம் (සිංහල)
අවංකව කටයුතූ - කරනවුන් වෙත කිසිවිට සොරකමැ යි කියවෙන - නපුරු කිරියක් නොවේ කිසි දා (𑇢𑇳𑇱𑇧)

சீனம் (汉语)
德性堅定之士, 絕無竊盜之念. (二百八十七)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Perhatikan-lah orang yang sudah menimbang segala bcnda di-dunia ini dan telah membuat azam yang tegoh di-hati-nya: dia tidak akan terfikir untok menipu jiran tetangga-nya sendiri.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
가장 비천한 행위 중 도둑질은 심오하게 고결한 자에게서는 발견되지 않는다. (二百八十七)

உருசிய (Русский)
Обман и воровство — суть темного искусства, называемого грабительством. Это искусство чуждо могуществу, которое называется умеренностью

அரபு (العَرَبِيَّة)
الرجل الذى يتزن الاشياء فى هذه الدنيا وهو حازم قوى الحـزم لا يرتكب خطأ غش وخداع جاره (٢٨٧)


பிரெஞ்சு (Français)
Ne se rencontre pas chez ceux qui ont le sens de la mesure, l’ignorance crasse appelée vol.

ஜெர்மன் (Deutsch)
Das dunkle Wissen des Betrugs findet sich nie mäh bei solchen, die nach der Rechtschaffenheil Größe verlangen

சுவீடிய (Svenska)
Hos dem som eftersträvar måttfullhetens dygd finns ej den mörka egenskap som vänder sig till stöld och bedrägeri.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Arlem! illam nigram. quae fraus dicitur, exercere non possunt. Qui ad magnitudinem eorum nituntur, qui modum tenent. (CCLXXXVII)

போலிய (Polski)
Zacny człowiek podłego działania nie wszczyna, Gwalcąc prawa człowiecze i boże.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22