பிறனில் விழையாமை

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.   (௱௫௰ - 150) 

அறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதனவற்றையே செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதிருத்தலே நல்லதாகும்  (௱௫௰)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒருவன் அறநெறியில் நிற்காமல் அறமில்லாதவைகளைச் செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாமல் வாழ்தல் நல்லது  (௱௫௰)
— மு. வரதராசன்


அறம் செய்யாமல் பாவத்தையே செய்பவனாக இருந்தாலும் அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவிமேல் ஆசைப்படாமல் இருப்பது நல்லது.  (௱௫௰)
— சாலமன் பாப்பையா


பிறன் மனைவியை விரும்பிச் செயல்படுவது அறவழியில் நடக்காதவர் செயலைவிடத் தீமையானதாகும்  (௱௫௰)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀅𑀶𑀷𑁆𑀯𑀭𑁃𑀬𑀸𑀷𑁆 𑀅𑀮𑁆𑀮 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑀼𑀫𑁆 𑀧𑀺𑀶𑀷𑁆𑀯𑀭𑁃𑀬𑀸𑀴𑁆
𑀧𑁂𑁆𑀡𑁆𑀫𑁃 𑀦𑀬𑀯𑀸𑀫𑁃 𑀦𑀷𑁆𑀶𑀼 (𑁤𑁟)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Aranvaraiyaan Alla Seyinum Piranvaraiyaal
Penmai Nayavaamai Nandru
— (Transliteration)


aṟaṉvaraiyāṉ alla ceyiṉum piṟaṉvaraiyāḷ
peṇmai nayavāmai naṉṟu.
— (Transliteration)


You may trespass the bounds of other virtues, But not the bounds of another's wife.

ஹிந்தி (हिन्दी)
पाप- कर्म चाहे करें, धर्म मार्ग को छोड़ ।
पर-गृहिणी की विरति हो, तो वह गुण बेजोड़ ॥ (१५०)


தெலுங்கு (తెలుగు)
పాప కర్మలెన్నొ పనిగొని చేసినా
పరనతి తభిలాషఁ బడమి మేల్మి (౧౫౦)


மலையாளம் (മലയാളം)
ധർമ്മനിഷേധിയായ് മുറ്റും പാപപങ്കിലനാകിലും പരസ്ത്രീസ്പർശനം കൂടാതുയിർ വാഴുന്നതുത്തമം (൱൫൰)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಧರ್ಮದ ಎಲ್ಲೆಯನ್ನು ಮೀರಿ ಅಲ್ಲದ್ದನ್ನು ಮಾಡಿದರೂ ಪರಸ್ತ್ರೀಯ ಅಂಗಲಾವಣ್ಯವನ್ನು ಬಯಸದಿರುವುದು ಒಳ್ಳೆಯದು. (೧೫೦)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
त्यक्‍त्वा धर्म मधर्मणां कर्ता चापि विशेषत: ।
श्‍लाघ्य एव भवेदत्र परस्त्रीविमुखो यदि ॥ (१५०)


சிங்களம் (සිංහල)
දහමට සිත නො ලා - අදහම් කළත් වියරුව පස්කම් සුව පිණිස- නොයනු යහපති පරඹුවන් වෙත (𑇳𑇮)

சீனம் (汉语)
人縱犯罪, 亦莫犯姦亂之罪. (一百五十)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Walau pun kamu melanggar dan memberi dorongan kapada segala dosa yang lain, jauhi-lah daripada dosa berzina: ini akan mengun- tongkan kamu.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
어떠한 죄악도 저지를 수 있지만, 다른 남자의 아내는 갈망하지 않아야 한다. (百五十)

உருசிய (Русский)
Даже если ты совершил зло и нарушил добродетель, но уже то хорошо, что ты не тщишься соблазнить чужую жену

அரபு (العَرَبِيَّة)
الحسنة (١٥٠)


பிரெஞ்சு (Français)
Qu’on commette même des péchés, au lieu de pratiquer la vertu ! Il est bon qu’on ne désire pas la femme d’autrui.

ஜெர்மன் (Deutsch)
Übt einer auch keinen dhjmsa, sondern adharma, su ist es doch gut für ihn, die Frau emes anderen nicht zu bigehren.

சுவீடிய (Svenska)
Om någon lämnat dygdens väg och gör allt ont så räknas det honom dock tillgodo om han lämnar hennes dygd i fred som hägnas av grannens gränser.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Etsi virtutem tibi non vindicans (ei) contraria feceris. bonum tibi erit. non concupiscere mulierem, quam sibi vindicavit alter. (CL)

போலிய (Polski)
Wiele jest grzechów gorszych i bardziej ponurych, Ale mało jest równie nikczemnych.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை நயவாமை நன்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22