செய்ந்நன்றி அறிதல்

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.   (௱௩ - 103) 

பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்  (௱௩)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .  (௱௩)
— மு. வரதராசன்


இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.  (௱௩)
— சாலமன் பாப்பையா


என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது  (௱௩)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀧𑀬𑀷𑁆𑀢𑀽𑀓𑁆𑀓𑀸𑀭𑁆 𑀘𑁂𑁆𑀬𑁆𑀢 𑀉𑀢𑀯𑀺 𑀦𑀬𑀷𑁆𑀢𑀽𑀓𑁆𑀓𑀺𑀷𑁆
𑀦𑀷𑁆𑀫𑁃 𑀓𑀝𑀮𑀺𑀷𑁆 𑀧𑁂𑁆𑀭𑀺𑀢𑀼 (𑁤𑁔)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin
Nanmai Katalin Peridhu
— (Transliteration)


payaṉtūkkār ceyta utavi nayaṉtūkkiṉ
naṉmai kaṭaliṉ peritu.
— (Transliteration)


The help given without weighing the return, When weighed, outweighs the sea.

ஹிந்தி (हिन्दी)
स्वार्थरहित कृत मदद का, यदि गुण आंका जाय ।
उदधि-बड़ाई से बड़ा, वह गुण माना जाय ॥ (१०३)


தெலுங்கு (తెలుగు)
అశలేక మేలుజేసిన గొప్పకు
సాగరంబు గూడ సమము గాదు. (౧౦౩)


மலையாளம் (മലയാളം)
പ്രത്യുപകാരമോരാതെയന്യർനൽകുന്ന സേവനം ദയാവായ്പിൽ നിനക്കുമ്പോളാഴിയേക്കാൾ മഹത്തരം (൱൩)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಫಲವನಳೆಯದೆ ಮಾಡಿದ ಉಪಕಾರದ ಭಾವನೆಯನ್ನು ಅಳೆದರೆ, ಅದು ಕಡಲಿಗಿಂತ ಹಿರಿದಾಗುತ್ತದೆ. (೧೦೩)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
अनालोच्य प्रतिफलं साह्‌यं प्रेम्णा विनिर्मितम् ।
विमृष्ट सत् समुद्रादप्यधिकं स्यान्न संशय: ॥ (१०३)


சிங்களம் (සිංහල)
ලබන පල නොසිතා- කළ උදව්වෙහි හොඳ බව මනින්නට හැකි නම්- මහා මුහුදට වැඩි විශාලයි (𑇳𑇣)

சீனம் (汉语)
施恩不望報, 其偉過於海洋. (一百三)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Lihat-lah budi baik yang di-buat tanpa niat meminta di-balas: samu- dera akan kelihatan kechil bila di-bandingkan dengan nilai-nya.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
아무런 기대없이 주는 도움은 그 선량함에 있어서 바다보다 더 크다. (百三)

உருசிய (Русский)
Намного больше самого большого океана добро от благого деяния, совершенного без мысли о воздаянии

அரபு (العَرَبِيَّة)
الإحسان إلى الغير بدون مقابل أعظم قدرا وقيمة من البحر فى اتساعه (١٠٣)


பிரெஞ்சு (Français)
L’exellence d’un service rendu sans que le prix en ait été pesé, est si on la pèse, plus vaste que l’océan.

ஜெர்மன் (Deutsch)
Hilfe, die ohne Warten auf Erwiderung gewährt wird, bringt genau besehen Gewinn, größer als der Ozean.

சுவீடிய (Svenska)
Om man väger den hjälp som ges utan tanke på lön så väger dess värde mer än hela havet.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Virtutem beneficii, quod non ponderato fructu conferatur, si pon-deres, bonitas ejus ipso Pelago major erit. (CIII)

போலிய (Polski)
Kto pomaga, nie licząc na zwrot zapomogi, Tego czyn jest zaiste bez ceny.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


கடலை விடப் பெரிய உதவி — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

எனக்கு எந்த விதத்திலோ, எப்படியோ கஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் கஷ்டம் நீங்க அவனுக்கு உதவி தேவைப்படுகிறது.

இந்த உதவியை அவனுக்கு செய்தால், தனக்கு என்ன லாபம்- பிரதி பிரயோசனம் கிடைக்கும் என்று எண்ணிப் பாராமல், ஒருவன் உதவி செய்கிறான்.

மனிதாபிமானத்தோடு, அவன் செய்த உதவியின் சிறப்பை- மென்மையின் பயனை அளந்து பார்த்தால், அது கடலை விடப் பெரிதாக, அளக்க முடியாதது ஆகும்.

உதவியினால், கஷ்டத்திலிஇருந்து நீங்கியவன், நன்றியோடு நினைத்துப் பார்த்தால் அதனால் கிடைத்த நன்மை கடலைவிட பெரிதாக தோன்றும்.


பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் நன்மை கடலின் பெரிது.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22