தன் வீட்டுக்கு வருகின்ற விருந்தினரை முகமலர்ச்சியோடு வரவேற்று, அவர்களுக்கு அன்போடு உணவு அளித்து, உபசரிப்பவன் வீடு எப்படி இருக்கும் என்றால், அப்படிப்பட்ட அன்புள்ளவன் வீட்டில் திருமகள் மகிழ்ச்சியோடு குடியிருப்பாள். அதாவது, அந்த வீட்டில் செல்வம் கொழிக்கும்.
இனிய முகத்தோடு, அன்பான வார்த்தை பேசி, உபசரிப்பது வந்த விருந்தினருக்கு அளவற்ற மகிழ்ச்சி அளிக்கும்.
(செல்வத்தை திருமகள். இலட்சுமி என்று கூறுவது வழக்கம்).