வான்சிறப்பு

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.   (௰௮ - 18) 

மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா  (௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது  (௰௮)
— மு. வரதராசன்


மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது  (௰௮)
— சாலமன் பாப்பையா


வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது? வழிபாடுதான் ஏது?  (௰௮)
— மு. கருணாநிதி


பிராமி (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀘𑀺𑀶𑀧𑁆𑀧𑁄𑁆𑀝𑀼 𑀧𑀽𑀘𑀷𑁃 𑀘𑁂𑁆𑀮𑁆𑀮𑀸𑀢𑀼 𑀯𑀸𑀷𑀫𑁆
𑀯𑀶𑀓𑁆𑀓𑀼𑀫𑁂𑀮𑁆 𑀯𑀸𑀷𑁄𑀭𑁆𑀓𑁆𑀓𑀼𑀫𑁆 𑀈𑀡𑁆𑀝𑀼 (𑁛𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


ஆங்கிலம் (English)
Sirappotu Poosanai Sellaadhu Vaanam
Varakkumel Vaanorkkum Eentu
— (Transliteration)


ciṟappoṭu pūcaṉai cellātu vāṉam
vaṟakkumēl vāṉōrkkum īṇṭu.
— (Transliteration)


If the heavens dry up, the very gods Will lack festival and worship.

ஹிந்தி (हिन्दी)
देवाराधन नित्य का, उत्सव सहित अमंद ।
वृष्टि न हो तो भूमि पर, हो जावेगा बंद ॥ (१८)


தெலுங்கு (తెలుగు)
దేవ పూజలేదు దినకృత్యములు లేవు
వాన గురియకున్న వసుధపైన (౧౮)


மலையாளம் (മലയാളം)
ദേവന്മാർക്കായ് നടത്തുന്ന പൂജകർമ്മാദിയൊക്കെയും മുടങ്ങാനിടവന്നീടും മഴപെയ്യാതിരിക്കുകിൽ (൰൮)

கன்னடம் (ಕನ್ನಡ)
ಈ ಲೋಕದಲ್ಲಿ ಮಳೆ ಸುರಿಯದಿದ್ದರೆ, ಮೇಲು ಲೋಕದಲ್ಲಿರುವ ದೇವತೆಗಳಿಗೂ ಜನರು ಪೂಜೆ, ಉತ್ಸವಗಳನ್ನು ವೈಭವದಿಂದ ನಡೆಸುವುದಿಲ್ಲ. (೧೮)

சமஸ்கிருதம் (संस्कृतम्)
देवताराधनं नित्यं विशेषादुत्सवादिकम् ।
लोके नैव प्रवर्तेत मेघो यदि न वर्षति ॥ (१८)


சிங்களம் (සිංහල)
අහස වියලීමෙන් - වැසි පල නො ලද තන්හී ඒ මහා මයුරෙහි- පවා සුන්දර සිරිය අඩු වේ (𑇪𑇨)

சீனம் (汉语)
若世上乾旱無雨, 世人将無犧牲供獻以敬事上天. (十八)
程曦 (古臘箴言)


மலாய் (Melayu)
Pengorbanan tidak akan di-beri kapada Dewa2, dan perayaan juga tidak akan di-pestakan di-dunia, sa-kira-nya langit sudah kekeringan.
Ismail Hussein (Tirukkural)


கொரிய (한국어)
비가 내리지 않는다면, 신에 대한 축제와 의식조차 없을 것이다. (十八)

உருசிய (Русский)
Если иссякнет дождь, то на земле исчезнут празднества и жертвоприношения богам

அரபு (العَرَبِيَّة)
لم يقدم أحد نذورا او يقيم حفلات للآلهة إذا انقطع المطر بمائه الوفير (١٨)


பிரெஞ்சு (Français)
Si la pluie ne tombe pas, les hommes ne célèbreront pas de fêtes en ce monde en l’honneur des habitants du ciel et ne leur offriront pas de sacrifices.

ஜெர்மன் (Deutsch)
Bleibt der Regen aus, gibt es hier auf Erden selbst für die Himmlischen keine feste und tägliche Verehrung mehr.

சுவீடிய (Svenska)
Om himlen torkar igen blir det ej heller för gudarna här på jorden någon dyrkan med fester.
Yngve Frykholm (Tirukkural)


இலத்தீன் (Latīna)
Sacra quotidiana cum sollemnibus, si coelum exsiccatur, et ipsis coelestibus in hac terra non precedent. (XVIII)

போலிய (Polski)
Bogi będą czekały na wonne ofiary, Ale nikt im tych ofiar nie poda.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

பிரபலமான அதிகாரம்

பிரபலமான குறள்

குறளில் பல முறை தோன்றிய சொல்
குறள்களில் பல முறை பயன்படுத்தப்பட்ட சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

பல முறை தோன்றிய குறளின் தொடக்க சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் தொடக்க சொல்
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

பல முறை தோன்றிய குறளின் இறுதி சொல்
பல முறை பயன்படுத்தப்பட்ட குறளின் இறுதி சொல்
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22