O ekstazie uścisków

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: மிஸ்ரசாப்பு
கண்ணிகள்:
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளதாம் உண்மையில் - காதல்
கொண்டவர் தாம் புணர்ச்சி மகிழ்தலும் பெண்மையில்

தொட்டபோதெல்லாம் துளிர்க்கும் பட்டுமேனிப் பாவையிவளின்
தோளிரண்டும் அமிழ்தினாலே இயன்றதோ - இந்த
நாளின் இன்பம் பருவமழையாய்ப் பொழிந்ததோ

நீங்கும் போது வெம்மை செய்யும் நெருங்கும்போது தண்மைபெய்யும்
நிலவு போன்றாள் நெருப்பை எங்ஙனம் பெற்றனள் - என்னை
விலகிடாது தன் நோய்க்கும் மருந்தாய் உற்றனள்

ஊடல் உணர்தல் புணர்தல் காதல் கூடியார்தாம் பெற்றபயனாய்
உள்ளம் விரும்பும் யாவும் இவளிடம் தோன்றுதே - ஒரு
கள்ளமும் இல்லாது பகுத்துண்ணல் போன்றதே

பூமருவும் வண்டு போலவும் மாமரத்தில் மயிலைப் போலவும்
காமவல்லியின் தோளில் துயின்றிடும் துயில்எனில் - அந்தத்
தாமரைக் கண்ணான் உலகும் இனிது கொல்

அறியும்தோறும் அறியும்தோறும் அறிந்திடாமையைக் காண்பதேபோல்
அரியநூற் பயனாகும் சேயிழை இன்பமே - வாழ்க்கை
புரியவே எனை வாழ்த்திடும் குறள் செல்வமே




Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22