Raga: சாரங்கி | Tala: ரூபகம் பல்லவி:நல்ல பொருள் இயலே - ஆட்சி
நடத்தும் அமைச்சியலே
அநுபல்லவி:சொல்லும் மதிநுட்பம் நூலோடும் பூத்திடும்
வெல்லும் பகையின்றி வேந்தரைக் காத்திடும்
சரணம்:அறத்தை அறிந்து நிற்கும் - சொல்லை
ஆன்றமைந்தே உரைக்கும்
அறிவாண்மை குடிகாத்தல் - முயற்சி
ஐந்தணியால் சிறக்கும்
பிரித்தலும் காத்தலும்
பிரிந்தார்ப் பொருத்தலும்
திறத்தினிலே மன்னும்
தேர்ச்சித் துணை என்னும்
அறி கொன்றறியாமல் - நாட்டின்
அரசன் வெகுண்டாலும்
உறுதி உழையிருந்தான் - கூறல்
உண்மைக் கடனாகும்
கருவியும் காலமும்
செய்கையதும் செய்யும்
அரு வினையு மாண்ட
தமைச் செனக் குறள் சொல்லும்