Raga: கேதாரம் | Tala: ஆதி பல்லவி:அகர முதல வெழுத்தென் றறிவோம்-ஆதி
பகவன் முதற்றே உலகெனப் பணிவோம்
அநுபல்லவி:அகவிருள் நீங்க அறிவொளி தோன்ற
அன்பினில் இன்பம் பெற
துன்பங்கள் யாவும் அற
சரணம்:கற்ற கல்வியதனால் ஆகும்பயன் இறைவன்
நற்றாள் தொழுதிட நவில் திருக்குறளின்
உற்ற துணையை நமதுளங்கொண்டு போற்றுவோம்
உலகம் கண்ட தமிழ் அருளறம் வாழ்த்துவோம்