O stanowczości

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான்பியாக்  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
உருவு கண்டெள்ளாதே - குறள்
உரைப் பதைத் தள்ளாதே
உருள் பெருந் தேர்க்குள்ள அச்சாணி போன்றவர்
உலகத்தில் உள்ளார் கண்டீர்

கல்லுக்குச் சிற்றுளி போல் - பெருங்
கதவுக்குத் தாழினைப் போல்
சொல்வினைக் குரியவர் சிறியவர் ஆனாலும்
சுடர் தரும் நல் விளக்காம்

வல்லமை பேசிடுவார் - வீணில்
வாய்வீச்சு வீசிடுவார்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"

விண்ணில் பறந்திடலாம் - இம
வெற்பிலும் கொடி நாட்டலாம்
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"

துன்பம் உறவரினும் - மனம
துணிந்து செயலாற்றினால்
இன்பம் பயக்கும் வினை மக்களாட்சியில்
என்றென்றும் போற்றப் பெறும்




Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22