Raga: ஆநந்தபைரவி | Tala: ஆதி பல்லவி:தாம் வீழ்வார் தம் வீழப் பெற்றவர் பெறறாரே
காமத்துக் காழில் கனி
அநுபல்லவி:நாம் காதல் கொண்டவர் நமக்கெவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளாக் கடை என்பதும் குறளுரை
சரணம்:இருவரிடத்தும் இன்றி ஒருவரிடத்தில் மட்டும்
இயக்கிடும் காம வேளும் என் துன்பமறியானோ
ஒரு தலையான் இன்னாது காமம் காவடி போல
இரு தலையானும் இனிதாகும் அதனாலே
அன்பில்லாரிடம் ஏனோ துன்பத்தைச் சொல் கின்றாய்
அதைவிட எளிதாகக் கடலையும் தூர்க்கலாமே
மன்னுயிர்க் காத்தளிக்கும் மழைபோலும் வீழ்வார் அன்பு
வாழிய என் நெஞ்சே இதை நீ அறிவாய் முன்பு