O wrogach wewnętrznych

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின்.   (௮௱௮௰௧ - 881) 

Nawet gaje i wody kryć mogą zarazę, Tak jak krewni – ukrywać nienawiść.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும்; தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும் (௮௱௮௰௧)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால் தீயனவே ஆகும், அதுபோலவே சுற்றத்தாறின் தன்மைகளும் துன்பம் தருவானால் தீயனவே ஆகும். (௮௱௮௰௧)
— மு. வரதராசன்


நிழலும் நீரும் முதலில் இனியவாக இருந்தாலும், பிறகு துன்பம் தருவனவே. அதபோல, நெருக்கமான உறவும் சொந்தக் கட்சிக்காரரும் கூடப் பழக்கத்தில் இனியவராக இருந்து, செயலில் துன்பம் தந்தால் அது பெருந் துன்பமே. (௮௱௮௰௧)
— சாலமன் பாப்பையா


இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும்கூடக் கேடு விளைவிக்கக் கூடியவையாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும் அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும் (௮௱௮௰௧)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀺𑀵𑀮𑁆𑀦𑀻𑀭𑀼𑀫𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸𑀢 𑀇𑀷𑁆𑀷𑀸 𑀢𑀫𑀭𑁆𑀦𑀻𑀭𑀼𑀫𑁆
𑀇𑀷𑁆𑀷𑀸𑀯𑀸𑀫𑁆 𑀇𑀷𑁆𑀷𑀸 𑀘𑁂𑁆𑀬𑀺𑀷𑁆 (𑁙𑁤𑁢𑁒)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Nizhalneerum Innaadha Innaa Thamarneerum
Innaavaam Innaa Seyin
— (Transliteration)


niḻalnīrum iṉṉāta iṉṉā tamarnīrum
iṉṉāvām iṉṉā ceyiṉ.
— (Transliteration)


Even shade and water unwholesome can harm Likewise one’s kinsmen if they hurt. (PS)

Hindi (हिन्दी)
छाया, जल भी हैं बुरे, जब करते हैं हानि ।
स्वजन-भाव भी हैं बुरे, यदि देते हैं ग्लानि ॥ (८८१)


Telugu (తెలుగు)
నీడ, నీళ్ళ గుణము వాడంగ దెలియును
ముందు దెలియదట్లె బంధు పగయు. (౮౮౧)


Malajalam (മലയാളം)
സുഖദം നിഴലും തണ്ണീർ ചിലകാൽ ദ്രോഹമേകിടും അത് പോലെ കുഡുംബക്കാർ ദ്രോഹകാരണമായിടാം (൮൱൮൰൧)

Kannada (ಕನ್ನಡ)
ತಂಪೆರೆಯಬಲ್ಲ ನೆಳಲೂ ನೀರೂ ಅಸುಖಕರವಾದರೆ ಅದರಿಂದ ಬಾಧೆಯುಂಟಾಗುವುದು; ಅದೇ ರೀತಿ ಬಂಧುಗಳ ಸ್ವಭಾವವು ಅಹಿತಕರವಾಗಿದ್ದರೆ ಅದರಿಂದ ಕೆಡುಕೇ ಸಂಭವಿಸುವುದು. (೮೮೧)

Sanskryt (संस्कृतम्)
रोगप्रदे यदि जलच्छाये त्याज्ये यथा जनै: ।
ज्ञातयो दु:खदास्तद्वत् त्यज्या ह्यान्तरवैरिण: ॥ (८८१)


Syngaleski (සිංහල)
සිසිල්සෙවනෙහි දිය - වුව නරක නම් නරකයි නෑයින් වූ නමුදු - නො කළයුතූ දැ කළොත් නරකයි (𑇨𑇳𑇱𑇡)

Chiński (汉语)
樹木泉水本皆有益於人, 若使滋生疾疫, 卽不可用; 人之親屬若使爲害, 亦如是之可惡也. (八百八十一)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Rimbunan pohon dan panchoran ayer melimpah pun tidak akan menggerangkan kalau penyakit yang di-sibar-nya: demikian juga saudara mara menjadi satu kejijikan sahaja bila mereka chuba mem- binasakan kita.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
그늘과물이질병을발생시키는경우그들은좋지않다.마찬가지로, 해를끼치는친척은나쁘다. (八百八十一)

Rosyjski (Русский)
Даже тень и влага могут быть неприятны, если доставляют боль. Подобно этому даже близкие люди неприятны, если доставляют неприятности

Arabski (العَرَبِيَّة)
لايجب احد أن يتربى الحدائق والنوفـيـر إن تسببان لـه المرض وكذلك الأقرباء يصيرون مـمقوتين إن يسعوا لهلاكة احد (٨٨١)


Francuski (Français)
L'ombre et l'eau occasionnant des maladies ne sont pas bienfaisantes, quoi qu'elles soient, indispensables ; il en va ainsi des parents, qui causent des douleurs.

Niemiecki (Deutsch)
Sogar Schatten und Wasser sind schlecht, wenn sie Schmerz verursachen - ebenso Angehörige, wenn sie Schmerz verursachen.

Szwedzki (Svenska)
Skugga och vatten verkar skönt men kan dock bli till skada. Så ock ens egna vänner om de tillskyndar onda ting.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Quae umbra et aqua ma.lefaciunt, mala sunt. Ita natura propin-quorum, si malefaciunt, tnala erit, (DCCCLXXXI)

முன் எச்சரிக்கை! — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

மக்கள் அனுபவிப்பதற்கு நிழலும், நீரும் முக்கியம். நிழலும் இனியது; நீரும் இனியது.

ஆனால், அந்த நிழலும், நீரும் உடல்நலம் காக்க உதவாமல், நோய் உண்டாக வதாக இருந்தால், அப்போது அனுபவிக்கும் இனிமையைப் பொருட்படுத்தாமல், பின்னால் வரும் நோயையே கருதி நீக்கி விடுகிறோம்.

அதுபோல, கற்றத்தாராக இருந்தாலும், இனியவர் போல் நடித்து தீமை செய்வார்களானால், அவர்களை உடனே விலக்கிவிட வேண்டும்.

வெளிப்படையாக பகைத்து நிற்பவர்களை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. ஏனெனில், அவர்களை பகைவர்கள் என்று அறிந்து, எப்போதும் முன்னெச்சரிக்கையாக தற்காப்பு செய்து கொள்ள முடியும். ஆனால், உறவு போல் தோன்றி, உட்பகை கொண்ட பகைவர்கள் தொடர்புக்குத்தான் பயப்பட வேண்டும். ஏனெனில், அவர்கள் நம்மவர்கள் என்று கருதி முன்னெச்சரிக்கை இல்லாமல், அகப்பட்டுக் கொண்டு துன்புறுவது எளிது.


நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும் இன்னாவாம் இன்னா செயின்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22