O dzialalności państwowej

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.   (௬௱௭௰௮ - 678) 

Dziki słoń za twym słoniem tak biegnie na łowach* Jak sukces za pierwszym sukcesem.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


Tâmil (தமிழ்)
மதநீரால் கன்னம் நனையும் யானையைக் கொண்டு, வேறான யானையைக் கட்டுவதைப் போல, பழகிய செயலின் அறிவைக் கொண்டே பிற செயல்களையும் செய்தல் வேண்டும் (௬௱௭௰௮)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது. (௬௱௭௰௮)
— மு. வரதராசன்


ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம். (௬௱௭௰௮)
— சாலமன் பாப்பையா


ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும் (௬௱௭௰௮)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀯𑀺𑀷𑁃𑀬𑀸𑀷𑁆 𑀯𑀺𑀷𑁃𑀬𑀸𑀓𑁆𑀓𑀺𑀓𑁆 𑀓𑁄𑀝𑀮𑁆 𑀦𑀷𑁃𑀓𑀯𑀼𑀴𑁆
𑀬𑀸𑀷𑁃𑀬𑀸𑀮𑁆 𑀬𑀸𑀷𑁃𑀬𑀸𑀢𑁆 𑀢𑀶𑁆𑀶𑀼 (𑁗𑁤𑁡𑁙)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Angielski (English)
Vinaiyaan Vinaiyaakkik Kotal Nanaikavul
Yaanaiyaal Yaanaiyaath Thatru
— (Transliteration)


viṉaiyāṉ viṉaiyākkik kōṭal naṉaikavuḷ
yāṉaiyāl yāṉaiyāt taṟṟu.
— (Transliteration)


Let one target be achieved through one's action, Like an elephant through another.

Hindi (हिन्दी)
एक कर्म करते हुए, और कर्म हो जाय ।
मद गज से मद-मत्त गज, जैसे पकड़ा जाय ॥ (६७८)


Telugu (తెలుగు)
కార్యమునకు తోడు కార్యమ్ముగైకొమ్ము
యేన్గు నేన్గు తోడ నీడ్చినట్లు. (౬౭౮)


Malajalam (മലയാളം)
കർമ്മപരിചയത്താലേ മറ്റുകർമ്മങ്ങൾ ചെയ്യലാം ഗജത്തെപ്പിടികൂടാനായ് ഗജങ്ങളുപയുക്തമാം (൬൱൭൰൮)

Kannada (ಕನ್ನಡ)
ಒಂದು ಕೆಲಸದಿಂದ ಮತ್ತೊಂದು ಕೆಲಸವು ಆಗುವಂತೆ ಮಾಡೀಕೊಳ್ಳುವುದು. ಮದವುಳ್ಳ ಆನೆಯ ಸಹಾಯದಿಂದ ಮತ್ತೊಂದು ಆನೆಯನ್ನು ಹಿಡಿಯವಂತೆ. (೬೭೮)

Sanskryt (संस्कृतम्)
मत्तेभमेकं सम्प्रेप्य यथन्यो गृह्यते गज: ।
कृतेनैकेन कार्येण तथान्यदपि साध्यताम् ॥ (६७८)


Syngaleski (සිංහල)
ඉටුකර ගැනීමත් - කිරියෙන් අනික් කිරියක් ඇතෙකූන් ලවා මද - ඇතකූ බඳවා ගැනුම සමවෙයි (𑇦𑇳𑇰𑇨)

Chiński (汉语)
得一再及其二; 獵一象乃使之再擒一象也. (六百七十八)
程曦 (古臘箴言)


Malajski (Melayu)
Orang menangkap gajah dengan menggunakan gajah yang lain: bagitu-lah juga perlu di-gunakan perusahaan yang satu untok men- chapai perusahaan yang kedua.
Ismail Hussein (Tirukkural)


Koreański (한국어)
훈련받은코끼리가다른코끼리를포획하는데사용되는것처럼, 또다른하나를성취하기위해하나의행동을사용해야한다. (六百七十八)

Rosyjski (Русский)
Используя одно действие, добивайся осуществления другого деяния. Точно так, используя течку слонихи, залавливают других слонов

Arabski (العَرَبِيَّة)
كما أن الناس يسوقون ويقبضون على فيل بمدد فيل آخر فكذلك عليهم أن ينجز واعملا بمدد عمل آخر (٦٧٨)


Francuski (Français)
Parachever une seconde œuvre, au cours de l'exécution d'une première et par son moyen, c'est attacher un éléphant en furie à un autre puissant éléphant.

Niemiecki (Deutsch)
Eine Handlung durch eine andere Handlung getan zu bekommen, ist wie das Fangen eines Elefanten durch einen anderen, brunftigen Elefanten.

Szwedzki (Svenska)
Att bruka ett företag som medel för ett annat är som att nyttja en brunstig elefant för att infånga en annan.
Yngve Frykholm (Tirukkural)


Łacina (Latīna)
Negotio (aliud) negotium conficere perinde est ac per elephantum, madido tempore praeditum, elephantum capere, (DCLXXVIII)

யானையும் பிரியமான செயலும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

யானை பிடிப்பவர் தன்னுடைய பழக்கப்பட்ட யானையைக்கொண்டு, காட்டில் திரிகின்ற வேறு புது யானைகளை பிடிப்பதற்கும், அதற்கான குழிகள் அமைத்து ஏமாற்றி, அவற்றிலே யானைகளை விழச்செய்து, பிடித்து விடுகிறார்கள்.

அதுபோல, தனக்கு விருப்பமான செயலை நிறைவேற்றிக் கொள்வதற்காக பிறருக்கு பிரியமான செயலைச் செய்து, அதன்மூலம் முடித்துக் கொள்ள வேண்டும்.

அதாவது, ஒரு காரியத்தை செய்யும் பொழுதே அதனோடு தொடர்புடைய காரியங்களையும் உடனே செய்து, முடித்துக்கொள்வது நன்மை தரும்.


வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22