De l’énergie

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.   (௫௱௯௰௧ - 591)
 

Ceux que l'on appelle possédants sont ceux qui ont de l'énergie. Ceux qui n'en ont pas deviendront-ils possédants, quoi qu'ils possèdent autre chose ?

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.   (௫௱௯௰௨ - 592)
 

La possession de l'énergie est une possession durable; celle des autres biens est éphémère.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை.   (௫௱௯௰௪ - 594)
 

La prospérité demanda le chemin et se rend chez celui qui a uns énergie inébranlable.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.   (௫௱௯௰௫ - 595)
 

La longueur des tiges des fleurs aquatiques est la mesure de la profondeur de l'eau : ainsi la grandeur est la mesure de la force de volonté de l'homme.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.   (௫௱௯௰௭ - 597)
 

L'éléphant se tient plus fermement, lorsqu'il est blessé d'une flèche pénétrante: ainsi l'homme énergique maintient sa grandeur sans se laisser abattre par l’insuccès.

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு.   (௬௱ - 600)
 

L'énergie n'est que l'excès de la finesse de l'esprit. Ceux qui n'en ont pas sont des arbres; ce qui les différencie des vrais arbres c'est leur forme humaine.

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிம்மேந்திரமத்திபம்  |  Tala: ஆதி
பல்லவி:
ஊக்கமே வாழ்க்கையின் உயிர்நாடி - இதை
உள்ளம் கொண்டே உழைத்தால்
வரும் செல்வம் நம்மைத் தேடி

அநுபல்லவி:
ஆக்க மிழந்தோ மென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடையார் எனும் குறள்வழி ஏற்கும்

சரணம்:
அம்பு புதைப்பட்டாலும் ஆற்றல் குன்றாத யானை
அஞ்சி நடுங்கத் தாக்கும் புலியின் வல்லாண்மை
நம்பும் முயற்சியுள்ளார் தளர்ச்சி யில்லாமை
நாளும் பெருமை ஓங்கும்
கேளும் கிளையும் தாங்கும்

வெள்ளத் தனையது ஆகும் மலரின் நீட்டம்
உள்ளத் தனைய மாந்தர் உயர்வுறும் நாட்டம்
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளலின் தேட்டம்
உள்ள உரமே ஏத்தும் உழவும் தொழிலும் வாழ்த்தும்




Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22