De l’évulsion du désir

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.   (௩௱௬௰௧ - 361)
 

La cause génératrice de la naissance, pour tous les êtres, en tous les temps, est le désir.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.   (௩௱௬௰௨ - 362)
 

S’il faut faire un souhait, souhaitons la non renaissance. Celle-ci est assurée par l’évulsion du désir.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.   (௩௱௬௰௩ - 363)
 

Il n’y a pas, de richesse, supérieure en ce monde à l’absence du désir, ni égale en l’autre monde.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.   (௩௱௬௰௪ - 364)
 

La pureté est l’absence du désir: celle-ci s’obtient par le culte du Vrai.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.   (௩௱௬௰௫ - 365)
 

Ceux que l’on appelle libérés de la renaissance sont ceux qui sont libérés du désir; les autres renaîtront.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா.   (௩௱௬௰௬ - 366)
 

C’set le désir qui abuse un chacun; fuir le désir est la vertu.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்   (௩௱௬௰௭ - 367)
 

A celui qui extirpe ses désirs, le salut vient par la voie qu’il désire.

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.   (௩௱௬௰௮ - 368)
 

Nulle douleur pour celui qui n’a pas de désir; au contraire, les souffrances s’accmulent sans fin, sur la tête de celui qui a le désir.

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.   (௩௱௬௰௯ - 369)
 

Celui qui extirpe le désir, qui est la douleur des douleurs, jouit du bonheur perpétuel, même ici-bas.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.   (௩௱௭௰ - 370)
 

Abandonner le désir qui, de sa nature, est insatiable, confère sur le champ, l’état inchangeable (la perfection).

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: ஆதி
பல்லவி:
ஆசை நோயை அழிப்பாய் - நாளும்
அன்பினிலே செழிப்பாய் நெஞ்சமே

அநுபல்லவி:
ஆசையினால் வரும் கேடோ அநேகம்
ஆகாது ஆகாது உனக்கதில் பாகம்

சரணம்:
துன்பம் தரும் அவாவின் தொடர்பு கொள்ளாதே
தூய நல்வாழ்வு பெற்றால் துயரம் இராதே
"இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்" என்று குறளே பன்னும்




Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22