Sens des signes

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.   (௲௯௰௯ - 1099) 

Le regard indifférent, de ceux qui ne se sont connus auparavant, apparaît chez ces amants.

Tamoul (தமிழ்)
முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொது நோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் தன்மை ஆகும் (௲௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொது நோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள இயல்பாகும். (௲௯௰௯)
— மு. வரதராசன்


முன்பின் தெரியாதவர் போல, பொதுவாக பார்த்தப் பேசுவது காதலர்களிடம் இருக்கும் குணந்தான். (௲௯௰௯)
— சாலமன் பாப்பையா


காதலர்களுக்கு ஓர் இயல்பு உண்டு; அதாவது, அவர்கள் பொது இடத்தில் ஒருவரையொருவர் அந்நியரைப் பார்ப்பதுபோலப் பார்த்துக்கொள்வர் (௲௯௰௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑀢𑀺𑀮𑀸𑀭𑁆 𑀧𑁄𑀮𑀧𑁆 𑀧𑁄𑁆𑀢𑀼𑀦𑁄𑀓𑁆𑀓𑀼 𑀦𑁄𑀓𑁆𑀓𑀼𑀢𑀮𑁆
𑀓𑀸𑀢𑀮𑀸𑀭𑁆 𑀓𑀡𑁆𑀡𑁂 𑀉𑀴 (𑁥𑁣𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Edhilaar Polap Podhunokku Nokkudhal
Kaadhalaar Kanne Ula
— (Transliteration)


ētilār pōlap potunōkku nōkkutal
kātalār kaṇṇē uḷa.
— (Transliteration)


To look at each other as if they were strangers Belongs to lovers alone.

Hindi (हिन्दी)
उदासीन हो देखना, मानों हो अनजान ।
प्रेमी जन के पास ही, रहती ऐसी बान ॥ (१०९९)


Télougou (తెలుగు)
తెలియనట్లుగానె తెలికించు ప్రక్రియ
కాముకులకు వచ్చు కైవశమ్ము. (౧౦౯౯)


Malayalam (മലയാളം)
അറിയാത്തയലാരെപ്പോലന്യോന്യമുള്ള ദർശനം പ്രേമമുള്ളിലിരിപ്പോരിൻ ശുദ്ധപ്രകൃതിയായിടും (൲൯൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ಅಪರಿಚಿತರಂತೆ ಸಾಮಾನ್ಯ ನೋಟದಿಂದ ನೋಡುವುದು ಪ್ರಣಯಿಗಳಲ್ಲಿ ಸಾಮಾನ್ಯ. (೧೦೯೯)

Sanskrit (संस्कृतम्)
उदासीनै: समं बाह्ये यदन्योन्यनिरीक्षणम् ।
अन्त: स्थितां प्रीतिमेव तद् व्यनक्ति तयोस्तदा ॥ (१०९९)


Cingalais (සිංහල)
අසල් වැසියන් ලෙස - අඟවා පොදුව නෙත් ලන ගතිය පෙම්වතුනට - සොබා දහමෙන් ලබා දී ඇත (𑇴𑇲𑇩)

Chinois (汉语)
惟在愛人之目光中, 轉可見漠不關心之色, 一似陌生人然. (一千九十九)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Hanya di-dalam mata mereka yang menchintai kita sahaja-lah maka dapat kita lihat pandangan yang benar2 tanpa khuatir, sa-olah2 mere- ka asing sama sa-kali dengan kita.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
그들은낯선사람처럼서로를바라보지만, 진정한연인이다. 이러한습관은단지연인들사이에서만발견된다. (千九十九)

Russe (Русский)
Воистину лишь в глазах влюбленных в нас замечаешь равнодушный взгляд. чужого человека

Arabe (العَرَبِيَّة)
الحسناء التى تحبنا تنظر إلينا بنظرة غير مبال كانها لينت لنا إلا كأجنبية (١٠٩٩)


Allemand (Deutsch)
Nichtssagende Blicke gleich Fremden auszutauschen, gehört nur zu sich Liebenden.

Suédois (Svenska)
Att kasta en kylig blick mot varandra såsom mot en främling är brukligt mellan dem som i hemlighet älskar varandra.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Socia secum loquitur: Ut alienas inter se aspicere in iis, qui desiderio amoris affecti sunt, deprehenditur. (MXCIX)

Polonais (Polski)
Obojętność pozorną i obcość udając, Łudzi się, że pozory zachowa.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22