La Civilité

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.   (௯௱௯௰௯ - 999) 

Cette vaste étendue de terre n'est pas éclairée même en plein jour, à ceux qui ne peuvent se réjouir avec tous, parce qu'ils n'ont pas la civilité.

Tamoul (தமிழ்)
பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழ மாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும் (௯௱௯௰௯)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம். (௯௱௯௰௯)
— மு. வரதராசன்


நல்ல பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட இருளிலே இருப்பது போலவாம். (௯௱௯௰௯)
— சாலமன் பாப்பையா


நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும் (௯௱௯௰௯)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀓𑀮𑁆𑀯𑀮𑁆𑀮𑀭𑁆 𑀅𑀮𑁆𑀮𑀸𑀭𑁆𑀓𑁆𑀓𑀼 𑀫𑀸𑀬𑀺𑀭𑀼 𑀜𑀸𑀮𑀫𑁆
𑀧𑀓𑀮𑀼𑀫𑁆𑀧𑀸𑀶𑁆 𑀧𑀝𑁆𑀝𑀷𑁆𑀶𑀼 𑀇𑀭𑀼𑀴𑁆 (𑁚𑁤𑁣𑁚)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Nakalvallar Allaarkku Maayiru Gnaalam
Pakalumpaar Pattandru Irul
— (Transliteration)


nakalvallar allārkku māyiru ñālam
pakalumpāṟ paṭṭaṉṟu iruḷ.
— (Transliteration)


To those who cannot laugh, This big world is all darkness even during the day.

Hindi (हिन्दी)
जो जन कर सकते नहीं, प्रसन्न मन व्यवहार ।
दिन में भी तम में पड़ा, है उनका संसार ॥ (९९९)


Télougou (తెలుగు)
కలుపుగోలుతనము గఱవైన వానికి
చిట్టుచీకటగును పట్టపగలే. (౯౯౯)


Malayalam (മലയാളം)
സജ്ജനസഹവാസത്താലാനന്ദം തോന്നിടായ്കിലോ ഒളിയേറും പകൽ ലോകമിരുളേന്തുന്ന പോലെയാം (൯൱൯൰൯)

Kannada (ಕನ್ನಡ)
ನಗಬಲ್ಲ ಗುಣವಿಲ್ಲದವರಿಗೆ ವಿಶಾಲವಾದ ಈ ಲೋಕದಲ್ಲಿ ಹಗಲಿನಲ್ಲೂ ಕತ್ತಲೆಯೇ ಕಾಣುವುದು. (೯೯೯)

Sanskrit (संस्कृतम्)
स्नेहतत्त्वं समालम्ब्य प्रवर्तनमजानताम् ।
दिवसोऽपि प्रभायुक्तो दृश्येत् तमसावृत: ॥ (९९९)


Cingalais (සිංහල)
තුටුවන හැකියාව - නැණ මඳ දනට නො මැතිය අඳුරු නැතිවිට වුව - වෙලෙන අඳුරක් ඔවුන්හට ඇති (𑇩𑇳𑇲𑇩)

Chinois (汉语)
人而無笑容者, 周行大地, 徂能見陰晦之色, 不能覩和煦之光也. (九百九十九)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Perhatikan-lah mereka yang tidak dapat tersenyum: di-dalam dunia yang lebar luas ini mereka tidak melihat apa2 sa-lain daripada kege- lapan walau pun di-waktu siang.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
남과애정을기울여사귀지않는자에게넓은세상은낮에도어둠속에있다. (九百九十九)

Russe (Русский)
Люди лишенные великодушия, неспособные смеяться в кругу друзей,,идят огромный мир, погруженным во тьму, даже в яркий день

Arabe (العَرَبِيَّة)
إن الذين لا يبتهجون ولا يهشون أمام اناس بابتسام على شفاههم على وجه هذه الارض الواسعة الطويلة العريضة لا يرون فى النهار إلا الظلامة والكابة (٩٩٩)


Allemand (Deutsch)
Wer sich anderen nicht anzuschließen und sich zu erfreuen vermag, für den ist die Welt in Dunkelheit begraben - selbst bei Tageslicht.

Suédois (Svenska)
För dem som saknar förmågan att skratta ligger den stora vida världen försänkt i mörker även mitt på ljusa dagen.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Qui (ceteris) jucundos se pracbere non possunt, iis terra late patens etiam interdiu in tenebris est (i. e. iis omnia sunt inju• cunda). (CMXCIX)

Polonais (Polski)
Człek posępny - pomimo że słońce się żarzy - Widzi jeno ciemności i chmury.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


இன்பமும் துன்பமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஒருவனுடைய உள்ளத்தில் நல்ல எண்ணங்கள், பண்புகள் அமைந்துவிட்டால், ஆணுக்கு உலகம் இன்பமாக காட்சி அளிக்கும். காணும் பொருள்கள் யாவும் மகிழ்ச்சியை அளிக்கும்.

அதுபோல, அவனுடைய உள்ளத்தில் அமைதி இல்லாவிட்டால், எண்ணம் துன்பமாகவே தோன்றும்.

அப்படிப்பட்டவனுக்கு, பெரிய உலகத்தில் பகல் பொழுது கூட இருள் சூழ்ந்ததாகவே தெரியும்.

(அன்போடும் பண்போடும் பிறரோடு மகிழ்ந்து உறவாட இயலாதவர்கள் என்றும் கூறலாம்).

எனவே, இன்பத்துக்கும் துன்பத்துக்கும் மனிதனின் மனப்பண்பே காரணமாக அமைகின்றது.


நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22