சூளையில் வேகவைத்த மண்குடமே நீரை சேமிப்பதற்கு ஏற்றது. வேகவைக்காத பச்சை மண் குடத்தில் நீரை நிரப்பி வைத்தால் நீரும் தங்காது, குடமும் அழிந்துவிடும்.
அதுபோல, பாவச்செயல் புரிந்து சம்பாதித்த செல்வத்தையும், பிறரைத் துன்புறுத்தி பறித்த பணத்தையும் சேர்த்துப் பூட்டி வைத்தால் என்ன ஆகும்? (அழிந்து போகும்).
பச்சை மண் குடத்தில் நீர் நிரப்பி வைத்தது போல் ஆகும்.