La gloire

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.   (௨௱௩௰௪ - 234) 

Si quelqu’un acquiert ici-bas une gloire indestructible, le monde des dévas ne célèbrera pas les bienheureux qui s’y trouvent.

Tamoul (தமிழ்)
உலகத்தின் எல்லைவரை பரவி நிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது; அப் புகழாளனையே விரும்பிப் போற்றும் (௨௱௩௰௪)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


நிலவுலகின் எல்லையில் நெடுங்காலம் நிற்கவல்ல புகழைச் செய்தால், வானுலகம் (அவ்வாறு புகழ் செய்தாரைப் போற்றுமே அல்லாமல்) தேவரைப் போற்றாது.. (௨௱௩௰௪)
— மு. வரதராசன்


தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்‌. (௨௱௩௰௪)
— சாலமன் பாப்பையா


இனிவரும் புதிய உலகம்கூட இன்றைய உலகில் தன்னலம் துறந்து புகழ் ஈட்டிய பெருமக்களை விடுத்து, அறிவாற்றல் உடையவரை மட்டும் போற்றிக் கொண்டிராது (௨௱௩௰௪)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀦𑀺𑀮𑀯𑀭𑁃 𑀦𑀻𑀴𑁆𑀧𑀼𑀓𑀵𑁆 𑀆𑀶𑁆𑀶𑀺𑀷𑁆 𑀧𑀼𑀮𑀯𑀭𑁃𑀧𑁆
𑀧𑁄𑀶𑁆𑀶𑀸𑀢𑀼 𑀧𑀼𑀢𑁆𑀢𑁂𑀴𑁆 𑀉𑀮𑀓𑀼 (𑁓𑁤𑁝𑁕)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Nilavarai Neelpukazh Aatrin Pulavaraip
Potraadhu Puththel Ulaku
— (Transliteration)


nilavarai nīḷpukaḻ āṟṟiṉ pulavaraip
pōṟṟātu puttēḷ ulaku.
— (Transliteration)


Even celestials will cease praising saints When you gain world-wide lasting fame.

Hindi (हिन्दी)
यदि कोई भूलोक में, पाये कीर्ति महान ।
देवलोक तो ना करें, ज्ञानी का गुण-गान ॥ (२३४)


Télougou (తెలుగు)
నిలచెనేని కీర్తి కలకాల మిల మీద
నమరపరుల కన్న నధికు డతఁడు. (౨౩౪)


Malayalam (മലയാളം)
അഴിയാത്തയശസ്സിന്നു ഹേതുവാമ്മ് പുണ്യകർമ്മിയെ വാനലോകം പുകഴ്ത്തുന്നു ജ്നാനിയേക്കാൾ മഹത്വമായ് (൨൱൩൰൪)

Kannada (ಕನ್ನಡ)
ಭೂಮಿಯುದ್ದಕ್ಕೂ, ನಿಡುಗಾಲ ನಿಲ್ಲುವ ಕೀರ್ತಿಯನ್ನು ಪಡೆದವರನ್ನಲ್ಲದೆ ಜ್ಞಾನಿಗಳನ್ನು (ದೇವತೆಗಳನ್ನು) ಕೀರ್ತಿಸದು ದೇವಲೋಕ. (೨೩೪)

Sanskrit (संस्कृतम्)
पृथिव्या: स्थितिपर्यन्तां कीर्ति यो लभते नर:
स्वर्गलोकोऽपि तं स्तौति न तु ज्ञानसमन्वितान्॥ (२३४)


Cingalais (සිංහල)
මෙලොව දිගූ යසසක්- ඇතිව සිටියොත් කිසිවෙක් ඔහුට මිස දෙව් ලොව- නො සැලකේ දෙවිවරුන්හට වත් (𑇢𑇳𑇬𑇤)

Chinois (汉语)
人獲不朽之榮名者, 爲天神所嘉許, 爲賢者所尊敬. (二百三十四)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Amati-lah orang yang telah memenangi kemashhoran abadi merata dunia: Dewa2 di-atas mengutamakan-nya lebeh daripada wali2.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
하늘은 신을 칭송하지 않지만 영원한 명성을 지난 지상의 사람은 칭송하리라. (二百三十四)

Russe (Русский)
Небожители, узрев увенчанного славой человека,,е будут славословить даже святых

Arabe (العَرَبِيَّة)
إن الآلهة لا يحين العقلاء فى الآخرة مثل ما يحين رجالا ذوى الصيت الحسن على وجه هذه الارض (٢٣٤)


Allemand (Deutsch)
Vollbringt jemand auf Erden Taten von unverfänglichem Ruhm - die himmlische Weltpreist solche Heiligen nicht.

Suédois (Svenska)
Om någon skaffar sig berömmelse som når till världens ände så blir han av gudavärlden högre prisad än de heliga asketerna.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Si laudem paras, quae finem terrae attingat, mundus coelestium in coelum sublatos non laudabit. (CCXXXIV)

Polonais (Polski)
Ludzi, których lud ceni, kochają bogowie Bardziej od tych, co ślęczą w foliałach.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


மக்கள் உள்ளத்தில் இருப்பவர் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

இந்த உலகத்தில் ஒருவன் வாழுகின்ற வரையிலும், அதற்குப் பிறகும் நீடித்து இருக்கக்கூடியது எது?

புகழே ஆகும்!

அந்தப் புகழ் எப்படிக் கிடைக்கும்?

மனிதன் தன்னுடைய கூட்டுறவு வாழ்க்கையில் எவ்வளவு மக்களுக்கு எத்தகைய உதவிகளை செய்கிறானோ, அத்தனை பேர்களுடைய உள்ளத்திலும் அவன் மறக்கமுடியாமல் வீற்றிருந்து வாழ்வான்.

இன்ப நலனை நுகர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தேவர்களை போற்றாமல் மக்களுக்கு ஈகை புரிந்தவனையே தேவலோகம் போற்றும்.

"இந்தப் பூமியில் இருக்கும் வரையிலும் புகழ் நீடித்து இருக்கும்" என்றும் சொல்லலாம்.


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22