Savoir pratiquer la bienfaisance

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.   (௨௱௰௫ - 215) 

La richesse du grand Sage qui désire se conformer et se conforme aux us et coutumes du monde, ressemble à la pièce d’eau du village qui est rempli jusqu’aux bords.

Tamoul (தமிழ்)
உலகினர் எல்லாரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவாளனுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும் (௨௱௰௫)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது. (௨௱௰௫)
— மு. வரதராசன்


உலகின் வளர்ச்சிப் போக்கை அறிந்து செயற்படும் பேர் அறிவாளனின் செல்வம், நீர் நிறைந்த ஊருணி எல்லார்க்கும் பொதுவாவது போல் பொதுவாகும். (௨௱௰௫)
— சாலமன் பாப்பையா


பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும் (௨௱௰௫)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀊𑀭𑀼𑀡𑀺 𑀦𑀻𑀭𑁆𑀦𑀺𑀶𑁃𑀦𑁆 𑀢𑀶𑁆𑀶𑁂 𑀉𑀮𑀓𑀯𑀸𑀫𑁆
𑀧𑁂𑀭𑀶𑀺 𑀯𑀸𑀴𑀷𑁆 𑀢𑀺𑀭𑀼 (𑁓𑁤𑁛𑁖)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Ooruni Neernirain Thatre Ulakavaam
Perari Vaalan Thiru
— (Transliteration)


ūruṇi nīrniṟain taṟṟē ulakavām
pēraṟi vāḷaṉ tiru.
— (Transliteration)


The wealth of a wise philanthropist Is a village pool ever full.

Hindi (हिन्दी)
पानी भरा तड़ाग ज्यों, आवे जग का काम ।
महा सुधी की संपदा, है जन-मन-सुख धाम ॥ (२१५)


Télougou (తెలుగు)
ఊరివారికెల్ల నుపయోగపడు నుయ్యి
నిండినట్లె దాత కుండు ధనము. (౨౧౫)


Malayalam (മലയാളം)
സമൂഹബോധവാൻ, വിജ്ഞൻ, ധന്യനായ് വിലസീടുകിൽ നാട്ടിൽ പൊതുതടാകത്തിൽ നീരേറുന്നത് പോലെയാം (൨൱൰൫)

Kannada (ಕನ್ನಡ)
ಉಪಕಾರದಿಂದ ಲೋಕ ಕಲ್ಯಾಣವನ್ನು ಬಯಸುವ ಹಿರಿಯ ಅರಿವುಳ್ಳವನ ಸಿರಿಯು, ಊರಿನ ಕೆರೆಯ ನೀರು ತುಂಬಿಕೊಂಡು ಜನರಿಗೆ ಉಪಕಾರ ಮಾಡಿದುದಕ್ಕೆ ಸಮಾನವಾದುದು. (೨೧೫)

Sanskrit (संस्कृतम्)
जलपूर्णतटाकेन भवन्ति सुखिनो जना:।
लोकोपकारिणो भाग्यं लोकसौख्यं प्रयच्छति॥ (२१५)


Cingalais (සිංහල)
පිය කරන ලෝවැසි - යහ ගූණවතූන් සතූ දන සිසිල් දිය පිරුණු - පිහිටි පොකූණක් වැන්න ගමමැද (𑇢𑇳𑇪𑇥)

Chinois (汉语)
智者之隆盛如满溢之水, 永不枯竭也. (二百十五)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Amati-lah kolah kampong yang terisi melimpah dengan ayer: saper- ti itu-lah melimpah-nya kema‘moran orang bijaksana yang chintakan dunia.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
인류를 사랑하는 현명한 사람의 부는 물이 가득찬 마을의 물탱크처럼 모두에게 유익하다. (二百十五)

Russe (Русский)
Если богатство находится в руках мудрого человека, желающего добра миру,,о оно подобно обильному роднику, к которому припадает вся деревня.

Arabe (العَرَبِيَّة)
الحكيم العاقل ينفق ثورته فى مصالح الناس ولا يخاف من انقطاعها فهي كمثل ينبوع لا ينفد ماءه (٢١٥)


Allemand (Deutsch)
Der Reichtum des Weisen, der die Welt liebt, ist wie das Wasser, das aus dem öffentlichen Teich überfließi.

Suédois (Svenska)
Den förståndiges rikedom är liksom vattnet som fyller dammen i byn.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Divitiae sapientis, qui morem servare studet, perinde sunt ac si lacus publicus aqua abundat. (CCXV)

Polonais (Polski)
Pieniądz w rękach właściwych jest czystym zalewem, Co zasila ojczystą wieś w wodę.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


ஊருணியும் அறிவாளர் செல்வமும் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

ஊரில் உள்ள குளத்தில்- ஊருணியில் நீர் நிறைந்து இருந்தால், ஊர் மக்கள் அதைத் தாராளமாக எடுத்து பயன்படுத்திக்கொள்வார்கள். அதுபோல, பொதுமக்களின் நன்மைக்காக, அறிவு உடையோரின் செல்வம் பொதுச்சொத்துப்போல், உலகத்தாருக்குப் பயன்படும்.

அறிவு உடையவர்கள் மக்களுக்கு உதவுவதே, தங்கள் கடமை என்று உணர்ந்தவர்கள். ஆகையால், செல்வம் சுருங்கியபோதும், உதவி செய்யத் தளரமாட்டார்கள். நீரைப் பயன்படுத்தும் மக்கள் குளத்தைப் பாதுகாப்பது போல், செல்வத்தின் பயனை பெற கருதுபவர்கள், செல்வம் உடைய அறிவாளரைப் போற்றி பாதுகாப்பார்கள்.

"அறிவுடையோரிடம் செல்வம் செய்வது எப்படி என்றால், குளத்தில் நீர் நிறைந்து இருப்பது போல என்றும் கொள்ளலாம்."

(அறிவுடையோரின் செல்வம், தம் ஊர் அளவிலும் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசம் அளவிலும் பயன்பட்டு வருவதை அறிந்துள்ளோம்).


ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22