L’affection

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.   (௭௰௭ - 77) 

De même que le soleil consume les invertébrés, la vertu consume ceux qui n’ont pas d’affection.

Tamoul (தமிழ்)
எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும் (௭௰௭)
புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)


எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும். (௭௰௭)
— மு. வரதராசன்


எலும்பு இல்லாத புழுவை வெயில் காய்ந்து கொள்வது போல அன்பு இல்லாத உயிரை அறக்கடவுள் காய்ந்து கொல்லும். (௭௰௭)
— சாலமன் பாப்பையா


அறம் எதுவென அறிந்தும் அதனைக் கடைப்பிடிக்காதவரை, அவரது மனச்சாட்சியே வாட்டி வதைக்கும் அது வெயிலின் வெம்மை புழுவை வாட்டுவதுபோல இருக்கும் (௭௰௭)
— மு. கருணாநிதி


Brahmi (𑀩𑁆𑀭𑀸𑀳𑁆𑀫𑀻 𑀮𑀺𑀧𑀺)
𑀏𑁆𑀷𑁆𑀧𑀺 𑀮𑀢𑀷𑁃 𑀯𑁂𑁆𑀬𑀺𑀮𑁆𑀧𑁄𑀮𑀓𑁆 𑀓𑀸𑀬𑀼𑀫𑁂
𑀅𑀷𑁆𑀧𑀺 𑀮𑀢𑀷𑁃 𑀅𑀶𑀫𑁆 (𑁡𑁘)
— (தமிழி / தமிழ்ப் பிராமி)


Anglais (English)
Enpi Ladhanai Veyilpolak Kaayume
Anpi Ladhanai Aram
— (Transliteration)


eṉpi lataṉai veyilpōlak kāyumē
aṉpi lataṉai aṟam.
— (Transliteration)


As the blazing sun dries up a boneless worm, So does virtue scorch a loveless being.

Hindi (हिन्दी)
कीड़े अस्थिविहीन को, झुलसेगा ज्यों धर्म ।
प्राणी प्रेम विहीन को, भस्म करेगा धर्म ॥ (७७)


Télougou (తెలుగు)
ప్రేమలేని వానిఁబీడించు ధర్మంబు
ఎముక లేని ప్రాణి నెండ విధము. (౭౭)


Malayalam (മലയാളം)
വെയിൽ വാട്ടിയുണക്കും പോലെല്ലി ല്ലാത്ത പുഴുക്കളെ ധർമ്മനീതിഹനിക്കുന്നു ദയയില്ലാത്ത ദുഷ്ടരെ (൭൰൭)

Kannada (ಕನ್ನಡ)
ಎಲುಬಿಲ್ಲದ ಹುಲು ಜೀವಿಗಳನ್ನು (ಹುಳುಗಳನ್ನು) ಬಿಸಿಲು ಸುಡುವಂತೆ ಪ್ರೀತಿ ಇಲ್ಲದವರನ್ನು ಧರ್ಮವು ಸುಡುತ್ತದೆ. (೭೭)

Sanskrit (संस्कृतम्)
निरस्थिकान् कीटगणान् आतपो बाघते यथा ।
जीवं प्रेम्णा विरहितं तथा धर्मोपि बाघते ॥ (७७)


Cingalais (සිංහල)
ඇට නැතිවුන්ගෙ ගත- අව්වෙන් වියලෙනා සේ ආදරය පණ නැති- හනික වියලේ දහම් අව්වෙන් (𑇰𑇧)

Chinois (汉语)
烈日炙滅弱體, 善神亦炙滅不愛人之人. (七十七)
程曦 (古臘箴言)


Malaisien (Melayu)
Lihat-lah bagaimana mentari membakar ulat yang tiada bertulang: bagitu-lah juga Kejujoran membakar manusia yang tidak mempu- nyai chinta.
Ismail Hussein (Tirukkural)


Coréen (한국어)
태양이 뼈없는 벌레를 태우듯이, 미덕은 냉담함을 괴롭힌다. (七十七)

Russe (Русский)
Добродетель испепелит лишенного любви человека точно так же, как пылающее солнце иссушает червя

Arabe (العَرَبِيَّة)
كما أن الشمس تجفـف الجسد وتهلك عظامه فكذلك إله الرشد والصلاح يبيد الرجل الذى يخلو من المحبة (٧٧)


Allemand (Deutsch)
Die Sonne verbrennt alles Beinlose – der dharma die Lieblosen.

Suédois (Svenska)
Liksom solen förbränner de benlösa reptilerna, så förtärs de kärlekslösa av Dygdens glödande nitälskan.
Yngve Frykholm (Tirukkural)


Latin (Latīna)
Ut sol adurit quod ossibus caret (velut formicae in regionibus soli vicinis), ita justitia (divina) quod amore caret. (LXXVII)

Polonais (Polski)
Ciało ludzkie, z którego wyjęte są kości, Jest podobne do szmaty zgniecionej.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)


புழுவைப் போன்றவன் — முல்லை பி. எல். முத்தையா (திருக்குறள் உவமைகள்)

வெய்யிலில் அகப்பட்ட புழுவானது, காய்ந்து துடிதுடித்து செத்துப்போய்விடும்.

அதுபோல, அன்பு இல்லாதவனை, நல்ல காரியங்களை செய்யாதவனை (தர்மத்துக்கு விரோதமான செயல்களை செய்தவன்) அறமே துன்புறுத்தி கொன்றுவிடும்.

மனிதாபிமானம் கொண்டு, மனிதநேயத்துடன் மக்களிடம் அன்பு செலுத்த வேண்டும். பழக வேண்டும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். தன்னுடைய நலமே பெரிதாகக் கருதி வாழ்பவனை, எவருமே திரும்பிக்கூட, பார்க்க மாட்டார்கள்.

அத்தகைய சுயநலக்காரன், தானாகவே துன்பம் அடைந்து அழிந்து போவான்.

(நன்மையான செயல்களை செய்வதே தர்மம் - அறம்)


என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம்.
ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்

Chapitre populaire

Couple populaire

Mot répété en couple
Mot le plus répété dans Thirukkural
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. இல்லை - 22

Mot répété dans Couplet Starting
Le plus courant Premier mot dans les couples
 1. ஆற்றின் - 5
 2. இன்பம் - 5
 3. நனவினால் - 5
 4. காமம் - 4
 5. காமக் - 4

Mot répété en fin de couple
Le plus courant Dernier mot dans les couples
 1. படும் - 42
 2. தரும் - 37
 3. இல் - 32
 4. கெடும் - 28
 5. செயல் - 22