Offenbaren der Gerüchte

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.   (௲௱௪௰௧ - 1141)
 

Mein kostbares Leben wird durch die Gerüchte der Leute erhalten - zum Glück wissen das viele nicht.

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.   (௲௱௪௰௨ - 1142)
 

Durch Gerüchte gab sie mir dieser Ort, da er ihren Wert nicht kannte - sie mit den blumengleichen Augen.

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.   (௲௱௪௰௩ - 1143)
 

Ist das Gerücht dieses Ortes nicht ein Gewinn - mir ist, als habe ich gewonnen, was ich nicht erworben habe.

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.   (௲௱௪௰௪ - 1144)
 

Meine Liebe verstärkt sich durch das Gerücht - ohne das Gerücht nimmt sie ab und verliert ihr Wesen.

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.   (௲௱௪௰௫ - 1145)
 

Wie Trinken durch Trinken immer reizvoller wird - Liebe wird reizvoller, wenn sie durchs Gerücht offenkundig wird.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.   (௲௱௪௰௬ - 1146)
 

Ich sah ihn nur einen einzigen Tag, aber die Gerüchte verbreiten sich gleich der Schlange, die den Mond verschlingt.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.   (௲௱௪௰௭ - 1147)
 

Mit dem Gerücht des Ortes als Dünger und den Worten der Mutter als Wasser wuchs diese Krankheit.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.   (௲௱௪௰௯ - 1149)
 

Er bat mich, mich weder zu fürchten noch zu schämen, und ging weg - warum sollte ich mich vor Gerüchten fürchten?

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.   (௲௱௫௰ - 1150)
 

Der Ort verbreitet das Gerücht, das ich brauche - mein Geliebter stimmt mit meinem Wunsch überein.

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாருகேசி  |  Tala: ஆதி
பல்லவி:
அலர் எழ ஆருயிர் நிற்கும் - இதனைப்
பலரும் அறியார் பாக்கியத்தால்

அநுபல்லவி:
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு மென்மேலும் ஈந்த திவ்வூரே!

சரணம்:
ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல்
நீராகவும் நீளும் இந்த நோய் தன்மையில்
யாராலும் தடைசெய்ய முடியுமோ எம்காதல்
அனலிடை நெய் சொரிந்தால் அணையுமோ பாரில்

தலைவி:-
அஞ்சுதல் வேண்டாமென்று கைமேல் அடித்துச் சொன்னார்
ஆயினும் நாணும்படி நம்மைவிட்டு ஏன்பிரிந்தார்
மிஞ்சும் இவ்வலருக்கு நானும் நாணுவதுண்டோ
வேண்டிய தெல்லாம் பெற மீண்டும் விரைவர் அன்றோ!




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22