Suchen nach der Hilfe Großer

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்.   (௪௱௪௰௧ - 441)
 

Die Freundschaft mil solchen, die dharma und reife Erkenntnis haben - erwirb sie und erkenne ihren Wert.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.   (௪௱௪௰௨ - 442)
 

Schätze die Freundschaft mit bedencenden Männern, die Schwierigkeiten beseitigen und sich vor Künftigem hüten

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.   (௪௱௪௰௩ - 443)
 

Bedeutende Männer zu schätzen und als Freunde zu haben - das ist das Allerkostbarste.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் த   (௪௱௪௰௪ - 444)
 

Solche als Freunde zu haben, die bedeutender sind als man selbst - das ist die größte aller Kräfte.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல்.   (௪௱௪௰௫ - 445)
 

Da ein Konig seine Minister gleichsam als Augen benutzen muß, soll er sie nur nach einer entsprechenden Prüfung anstellen.

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்.   (௪௱௪௰௭ - 447)
 

Hat der Herrscher Berarer, die ihn mäßigen - wer ist mächtig genug, ihn zu vermehren?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.   (௪௱௪௰௮ - 448)
 

Hat der König keinen, der ihn mäßigen, ist er ungeschützt - er geht auch ohne Vernichter zugrunde.

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை.   (௪௱௪௰௯ - 449)
 

Wer kein Kapital hat, macht auch keinen Gewinn - wer keine ihn unttrstüiztnden Freunde hat, kennt auch keine Beständigkeit.

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.   (௪௱௫௰ - 450)
 

Die Freundschaft Guter aufzugeben ist zehnmal schädlicher, als die Feindschaft vieler zu gewinnen.

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சங்கராபரணம்  |  Tala: ஆதி
பல்லவி:
பெரியாரைத் துணைக் கொள்ளுவோம்
பெற்ற தன்னாட்சி நலம்
பெற்றிடவே என்றும்

அநுபல்லவி:
அரிய வற்று ளெல்லாம் அரியதாம் இனியதாம்
அரண் படை பொருள் வன்மை
யாவினும் மேலதாம்

சரணம்:
ஆலமரத்தினடி விழுதுகள் போலும்
அழகுமணி மண்டபத் தூண்களைப் போலும்
காலத்தில் தாங்கும் நல்ல பிள்ளைகள் போலும்
காக்கும் நன்றாகவே நோக்கும் கண்ணாகவே

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொள்ளலின் மேன்மை
குறளரி வூட்டும் நல்லார் தொடர்கைவிடாது
கோரும் நன்மைகள் எல்லாம் சேரும் தப்பாது




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22