Unwissenheit

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.   (௮௱௪௰௧ - 841)
 

Der Mangel an Weisheit ist der größte Mangel - die anderen Mängel erkennt die Welt nicht als solche an.

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்.   (௮௱௪௰௨ - 842)
 

Eines Unwissenden Grund, mit erfreutem Herzen zu geben, beruht ausschließlich auf den guten Taten des Empfängers.

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.   (௮௱௪௰௪ - 844)
 

Fragt man, was Mangel an Weisheit ist - es ist der Dünkel zu sagen: «Wir haben Weisheit.»

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.   (௮௱௪௰௫ - 845)
 

Gibt einer vor zu wissen, was er nicht gelernt hat, zweifelt man auch an dem, was er sorgfältig gelernt haben will.

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.   (௮௱௪௰௬ - 846)
 

Es ist töricht zu meinen, daß man mit dem Bedecken seiner Nacktheit auch seine Fehler ausmerzen könne.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.   (௮௱௪௰௭ - 847)
 

Ein Tor fügt sich selbt großen Schaden zu, wenn er ausgezeichneten Rat mißachtet.

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய்.   (௮௱௪௰௮ - 848)
 

Wer nichts auf einen Rat gibt und nichts weiß - solch ein Leben ist eine Krankheit bis zum Tod.

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.   (௮௱௪௰௯ - 849)
 

Wer sich daran macht, einen Toren zu belehren, ist selbst ein Tor - der Tor sieht es entsprechend seiner Erkenntnis.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.   (௮௱௫௰ - 850)
 

Wer bestreitet, was die Leute der Welt für wirklich halten, wird für einen Geist aul Erden gehalten.

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: ஆதி
கண்ணிகள்:
புல்லறி வாண்மையே ஏன் பிறந்தாயோ
பூமியில் பிறந்ததன் பயன் அடைந்தாயோ
நல்லோர்கள் சொல்வதைக் காதிற் கேளாயோ
நான் எனும் அகந்தைக்கே பிறப்பிடம் நீயோ

அறிவு கொண்டே குற்றத்தைக் கலையாத போழ்தில்
ஆடை கொண்டே உடலை மறைப்பதும் ஏனோ
அறியாத நூல்களையும் அறிந்ததாய் மேற்கொண்டால்
அறிந்ததும் ஐயமாய்ப் போகும் அன்றே

பூவாமல் காய்த்திடும் மரமுமே உள்ளதைப்
புல்லறி வாண்மை நீ உணர்ந்திலையோ
ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ்வுயிர்
போகும் அளவும் ஒரு நோயல்லவோ

அரிய மறை பொருளைக் காத்துக் கொள்ளாமலே
அல்லலில் சிக்கியே மடிவாயோ
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மை வையாதுலகு எனும் குறளே




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22